வந்தவாசி அருகே மின் வேலியில் சிக்கி பெண் பலி


வந்தவாசி அருகே மின் வேலியில் சிக்கி பெண் பலி
x
தினத்தந்தி 1 Aug 2021 11:00 PM IST (Updated: 1 Aug 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வந்தவாசி

வந்தவாசிைய அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் மனைவி மல்லிகா (வயது 43). இவர் நேற்று முன் தினம் தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மாட்டுக்கு புல் அறுத்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர்களின் நிலத்துக்கு அருகில் உள்ள ஆறுமுகத்தின் கரும்புத்தோட்டம் வழியாக சென்றுள்ளார். அங்கு, காட்டுப்பன்றிக்காக வைத்திருந்த மின் வேலியில் சிக்கிய மல்லிகா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தெள்ளார் போலீசாருக்கு கணவர் ஏழுமலை தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சோனியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கரும்புத்தோட்டத்தில் மின்வேலி அமைத்த விவசாயி ஆறுமுகத்தை நேற்று கைது செய்தனர். கைதான ஆறுமுகம் தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்க திருவண்ணாமலை மாவட்ட தலைவராக உள்ளார்.

Next Story