சிங்கம்புணரி,
சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபீஷாபானு தலைமை தாங்கினார்.. சிங்கம்புணரி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது முன்னிலை வகித்தார். சிங்கம்புணரி பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்ற முகாமில் 3-வது அலை தொற்று மிகவும் வீரியம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் கடைகளுக்கு சென்று வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பஸ்சில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் தினகரன் மற்றும் மதியரசு, சுகாதார மேற்பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.