விளை நிலங்களில் மின்வேலி அமைத்தால் நடவடிக்கை.போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


விளை நிலங்களில் மின்வேலி அமைத்தால் நடவடிக்கை.போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 Aug 2021 12:01 AM IST (Updated: 2 Aug 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

விளை நிலங்களில் மின்வேலி அமைத்தால் நடவடிக்கை

திருவண்ணாமலை

விவசாய நிலங்களில் எலி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக விவசாயிகள் சிலர் தங்களின் விளைநிலைங்களை சுற்றி சட்ட விரோதமாக மின்வேலி அமைக்கின்றனர். இதன் மூலம் சில நேரங்களில் மனிதர்கள் மற்றும் வன உயிரினங்கள் மின்வேலியில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இதனை தடுக்கும் வகையில் இனிவரும் காலங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் விளைநிலங்களில் யாரேனும் மின்வேலி அமைப்பது தெரியவந்தால் அந்த நபர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி தெரிவித்து உள்ளார்.

Next Story