வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு


வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Aug 2021 12:09 AM IST (Updated: 2 Aug 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

சாயல்குடி, 
கடலாடி வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர் டாம்பிசைலஸ் ஆய்வு மேற்கொண்டார். கூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட பண்ணை எந்திரங்களை மூக்கையூர், மேலக்கிடாரம் மற்றும் பீ.கீரந்தை ஆகிய கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டபோது உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பண்ணை எந்திரங்களை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். ஆய்வின்போது உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் கண்ணையா, வேளாண்மை துணை இயக் குனர் பாஸ்கர மணியன், வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தர வள்ளி, வேளாண்மை அலுவலர் கிருத்திகா மற்றும் உதவி வேளாண்மை அலுவ லர்கள் உடன் இருந்தனர்.  விவசாயிகளுக்கு  பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறைகள் குறித்து வேளாண்மை அலுவலர் கிருத்திகா மற்றும் தொகுப்பு ஒருங்கிணைப்பாளர் வினோத் ஆகியோர் செய்து காண்பித்தனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஆனந்தகுமார் செய்திருந்தார்

Next Story