மாயனூர் காவிரி ஆற்றங்கரையில் மீன்கள் விற்பனை அமோகம்


மாயனூர் காவிரி ஆற்றங்கரையில் மீன்கள் விற்பனை அமோகம்
x

மாயனூர் காவிரி ஆற்றங்கரையில் மீன்கள் விற்பனை அமோகமாக நடந்தது.

கிருஷ்ணராயபுரம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் காவிரி ஆற்றில் அதிகளவு மீன்கள் வளர்ந்து வருகிறது. இதனை அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் வலைவிரித்து மீன்களை பிடித்து கரையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த மீன்களை மாயனூர், கிருஷ்ணராயபுரம், கோவளம், பிச்சம்பட்டி, மணவாசி, வீரராக்கியம், சேங்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்கள் விற்பனை அமோகமாக  நடந்தது. இதில் ஒரு கிலோ ஜிலேபி மீன் ரூ.100, கெண்டை ரூ.100, ஆரா, லோகு ரூ.200, கொக்கு மீன் ரூ.150-க்கு விற்பனையானது. தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் மீன்களைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால்  கடந்த வாரத்தை விட இந்தவாரம் மீன்களின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story