மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி + "||" + Youth killed in accident

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
நாங்குநேரி:

களக்காடு அருகே கருவேலன்குளத்தைச் சேர்ந்தவர் கதிரவன் மகன் நளின் நிதிஷ்குமார் (வயது 22). புகைப்படக்காரரான இவர் ஏர்வாடியைச் சேர்ந்த சங்கருடன் (28) சேர்ந்து வள்ளியூரில் ஸ்டூடியோ நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் இரவில் நளின் நிதிஷ்குமார், சங்கர் ஆகிய 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு புறப்பட்டு சென்றனர். நாங்குநேரியை அடுத்த நம்பிநகர் நாற்கர சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

இதில் லாரியின் அடியில் சிக்கியதில் படுகாயமடைந்த நளின் நிதிஷ்குமார், சங்கர் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நளின் நிதிஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

சங்கருக்கு அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான கன்னியாகுமரி மாவட்டம் சித்தன்குடியிருப்பைச் சேர்ந்த மணிகண்டனை (38) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கூலித்தொழிலாளி விபத்தில் பலி
கூலித்தொழிலாளி விபத்தில் பலியானார்.
2. பவானி அருகே ஆவின் பால் ஏற்றி வந்த வேன் மோதி மாணவி பலி
பவானி அருகே ஆவின் பால் ஏற்றி வந்த வேன் மோதி மாணவி பலி ஆனார்.
3. விருந்துக்கு சென்ற புதுமாப்பிள்ளை பரிதாப சாவு
கயத்தாறு அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விருந்துக்கு சென்று திரும்பிய புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
4. விபத்தில் தொழிலாளி சாவு
சங்கரன்கோவில் அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.
5. குருவிகுளம் அருகே விபத்து: தாய்-மகன் பரிதாப சாவு
குருவிகுளம் அருகே சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய்-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.