கரும்புகள் சாலையில் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு


கரும்புகள் சாலையில் சரிந்ததால் போக்குவரத்து  பாதிப்பு
x
தினத்தந்தி 2 Aug 2021 12:47 AM IST (Updated: 2 Aug 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

கரும்புகள் சாலையில் சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

நொய்யல்
ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியில் இருந்து இரட்டை டிப்பர் பொருத்திய டிராக்டரில் கரும்புகளை ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம், நொய்யல் வழியாக புகளூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சேமங்கி அருகே வந்தபோது இரண்டு டிப்பரில் ஒரு டிப்பரில் இருந்த கரும்புகள் திடீரென மளமளவென சரிந்து நடு சாலையில் விழுந்தது. இதையடுத்து ஆட்களை கூட்டி வந்து கரும்புகளை ஓரமாக நகர்த்தி போக்குவரத்தை அங்கிருந்தவர்கள் சரிசெய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story