மாவட்ட செய்திகள்

நிலத்தகராறில் அடிதடி; ஒருவர் கைது + "||" + Arrested

நிலத்தகராறில் அடிதடி; ஒருவர் கைது

நிலத்தகராறில் அடிதடி; ஒருவர் கைது
நிலத்தகராறில் அடிதடி ஏற்பட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வெள்ளியணை
வெள்ளியணை அருகே உள்ள பொரணி கும்மாயம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 50). அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (53). இந்தநிலையில் சண்முகத்தின் தாத்தா வெள்ளைய கவுண்டர் என்பவரின் பெயரில் இருந்த 3 ஏக்கர் நிலத்தை செல்வம் ஏமாற்றி தனது மனைவி தமிழரசி பெயருக்கு பட்டா மாற்றியுள்ளதாக கூறி சண்முகம் தகராறில் ஈடுபட்டு செல்வத்தை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த செல்வம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், வெள்ளிணை போலீசார் வழக்குப்பதிந்து, சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அரசு பஸ்களில் பேட்டரிகள் திருடிய 2 பேர் கைது
மதுரையில் அரசு பஸ்களில் இருந்து பேட்டரிகள் திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு; 2 பெண்கள் கைது
மதுரையில் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை பறித்த 2 பெண்களை கைது செய்தனர்
3. அரிசி அரவை ஆலையில் மின் மோட்டார் திருட்டு; 3 பேர் கைது
அரிசி அரவை ஆலையில் மின் மோட்டார் திருடியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. கோவில் தேரை தீ வைத்து கொளுத்த முயன்ற வாலிபர் கைது
கோவில் தேரை தீ வைத்து கொளுத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. பொக்லைன் எந்திர டேங்கில் இருந்து டீசல் திருடிய தந்தை-மகன்கள் உள்பட 3 பேர் கைது
ஆவூர் அருகே பொக்லைன் எந்திர டேங்கில் இருந்து டீசல் திருடிய தந்தை, மகன்கள் உள்பட 3 பேர்கைது செய்யப்பட்டனர்.