பா.ஜ.க. கருத்தரங்கு
பா.ஜ.க. கருத்தரங்கு நடந்தது.
தொண்டி,
திருவாடானை கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் என்ற பா.ஜ.க. வின் உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் கருத்தரங்கு நடைபெற்றது. அஞ்சுகோட்டை ஆனிமுத்து கருப்பர் மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் அஞ்சுகோட்டை ஆனிமுத்து முன்னிலை வகித்தார். அனைவரையும் ஒன்றிய பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் குமார், தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பா.ஜ.க. வின் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் நிகழ்ச்சி பற்றிய விளக்கம் அளித்து சிறப்புரையாற்றினர். இதில் திருவாடானை கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஒன்றிய பொருளாளர் மகாலிங்கம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story