கைவினைப்பொருட்கள் உற்பத்தி கூடம்-கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்


கைவினைப்பொருட்கள் உற்பத்தி கூடம்-கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 2 Aug 2021 1:00 AM IST (Updated: 2 Aug 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே கைவினைப்பொருட்கள் உற்பத்தி கூடத்தை கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்.

களக்காடு:
களக்காடு அருகே கைவினைப்பொருட்கள் உற்பத்தி கூடத்தை கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்.

உற்பத்தி கூடம்

களக்காடு அருகே உள்ள பத்மநேரி பகுதியில் வாழைநார் மூலம் கைவினைப்பொருட்கள் உற்பத்தியினை மேம்படுத்துவதற்காக காதிகிராப்ட் சார்பில் பொதுசேவை மைய கட்டிடமான உற்பத்தி கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதனை நெல்லை கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, களக்காடு பகுதிகளில் அதிக அளவிலான வாழை பயிரிடப்பட்டு பெருமளவிலான வாழைப்பழங்கள் விற்கப்படுகிறது. வாழை பயிரிடுவதற்கு தகுந்த இடமாக களக்காடு வட்டார பகுதி அமைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் இரண்டாவதாக அதிகளவில் வாழைநார் மூலம் கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடமாகவும் களக்காடு பகுதி உள்ளது என்றார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., காதி கிராம தொழில்மைய தென்மண்டல உறுப்பினர் சேகர்ராவ் பிரேலா, தென்மண்டல கதர் கிராம தொழில் மைய துணை தலைமை நிர்வாக பொறியாளர் பாண்டே, கோட்ட இயக்குனர் அசோகன், புரனமைப்பு திட்ட இயக்குனர் சுசிலா பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story