பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து டிரைவர் பலி


பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து டிரைவர் பலி
x
தினத்தந்தி 2 Aug 2021 1:04 AM IST (Updated: 2 Aug 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து டிரைவர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

நெல்லை:
நெல்லை அருகே பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து டிரைவர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

நண்பர்கள்

நெல்லை பழைய பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). டிரைவர். டவுனை சேர்ந்தவர் ஜாபர் அலி (48).

நண்பர்களான இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நெல்லை அருகே உள்ள நொச்சிகுளம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சரவணன் ஓட்டினார். அப்போது மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது.

டிரைவர் சாவு

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். ஜாபர் அலி படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீவலப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜாபர் அலியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர் சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story