மின் மோட்டார் திருடிய 3 பேர் கைது


மின் மோட்டார் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2021 1:07 AM IST (Updated: 2 Aug 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

மின்மோட்டார் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேட்டை:

சுத்தமல்லி அடுத்த நடுக்கல்லூரிலிருந்து-சீதபற்பநல்லூர் செல்லும் சாலையில் உள்ள கல்குவாரியில் வடக்கு சங்கன்திரடு பகுதியை சேர்ந்த செல்லத்துரை (வயது 50) என்பவர் காவலாளியாக உள்ளார். இங்கு கடந்த 30-ந் தேதி வடக்கு சங்கன் திரடு பகுதியை சேர்ந்த வனராஜா (21), மகா கணேஷ் என்ற கார்த்திக் (25) உள்பட 3 பேர் மின் மோட்டாரை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து செல்லத்துரை சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் திரெசா விசாரணை நடத்தி, மின்மோட்டார் திருடியதாக வனராஜா உள்பட 3 பேரையும் கைது செய்தார். 

Next Story