செல்லியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
செல்லியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது
திருவேங்கடம்:
திருவேங்கடம் -ஆவுடையாபுரம் ரோட்டின் அருகே நிட்சேப நதியின் கரையில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
இதில் திருவேங்கடம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, வெற்றிலை, பாக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story