ரியல் எஸ்டேட் அதிபரை வெட்ட முயற்சி; 7 பேர் கைது


ரியல் எஸ்டேட் அதிபரை வெட்ட முயற்சி; 7 பேர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2021 1:14 AM IST (Updated: 2 Aug 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

ரியல் எஸ்டேட் அதிபரை வெட்ட முயன்ற சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

வரதராஜன்பேட்டை:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தை தேவாங்கர் தெருவைச் சேர்ந்தவர் மணி (வயது 51). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பூதாம்பூர் கிராமம் அன்பு நகரில் வசிக்கும் சிவராமசேது என்பவருக்கு சொந்தமான இடம் ஆண்டிமடம் -விருதாச்சலம் சாலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தை மணி விலைபேசி ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த இடத்தில் பொக்லைன் எந்திரம் கொண்டு சமன்படுத்தும் பணியை மணி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பொன்பரப்பி மேட்டுத்தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பெரியார் நகரை சேர்ந்த ராஜப்பன் (70), இளமங்கலம் மேலத்தெருவை சேர்ந்த ரவி (47), ஆண்டிமடம் இந்திரா நகரைச் சேர்ந்த கொளஞ்சி (54), கருக்கை மேல தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் (45), குவாகம்-வல்லம் மேல தெருவைச் சேர்ந்த பிரபாகரன், தமிழ் கனல் (25) ஆகியோர் 2 கார்களில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்து, மணியை தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். மேலும் பாக்கியராஜ் அரிவாளால் மணியை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. சுதாரித்துக்கொண்ட மணி வெட்டுப்படாமல் தப்பித்தார். இது குறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் மணி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜ், ராஜப்பன், ரவி, கொளஞ்சி, ஜெயக்குமார், பிரபாகரன், தமிழ் கனல் ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story