5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் உள்பட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தூத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வைப்பூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய அருள்மோகன்(வயது 27), ஆண்டிமடம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட விளந்தை பெரிய ஏரிக்கரை அருகில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்ற சிவக்குமார் (58), சின்னதுரை (62), செந்துறை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வஞ்சினாபுரம் கிராமத்தில் பிச்சை பிள்ளை கொலை வழக்கில் அருள்குமார் (27) மற்றும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செந்தமிழ்ச்செல்வன் (31) ஆகிய 5 பேரையும் போலீசார் ஏற்கனவே கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
தற்போது அவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் ரமணசரஸ்வதி மேற்கண்ட 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் உள்ள அருள்மோகன், தமிழ்ச்செல்வன், சிவக்குமார், சின்னதுரை, அருள்குமார் ஆகியோரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகலை போலீசார் வழங்கினர்.
Related Tags :
Next Story