ஆண்டாள் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி இல்லை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் தேர் திருவிழா நடைபெறவில்லை. கோவில் வளாகத்துக்குள்ளேயே தங்க தேர் இழுக்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் ஆடிப்பூர திருவிழா கோவில் பிரகாரத்தில் நடத்த உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தினமும் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறாமல் உள்பிரகாரத்தில் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்தது. இதற்கிடையே கலெக்டரின் உத்தரவின் படி நேற்று காலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்றது. முன்கூட்டியே அறிவிப்பு இல்லாததால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர்.
Related Tags :
Next Story