கார் மோதி நகராட்சி ஊழியர் பலி
ராஜபாளையத்தில் கார் மோதியதில் நகராட்சி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் கார் மோதியதில் நகராட்சி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
கொரோனா தடுப்பூசி
ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 50). இவர் ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரும் வேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன்(21) என்பவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் செட்டியார்பட்டியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தென்காசி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
நகராட்சி ஊழியர் சாவு
இதில் செந்தில் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மகேந்திரன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காரை ஓட்டி வந்த மதுரை சுப்புலாபுரத்தை சேர்ந்த சிவஞானம் (53) என்பவர் மீது தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story