மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccine

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
புதுக்கோட்டை
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அவசியம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இதேபோல கொரோனா விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட கிராம ஊராட்சி பேரூராட்சி மற்றும் நகராட்சிகளை பாராட்டி மாவட்ட நிர்வாகத்தினரால் நற்சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.தொடர்புடைய செய்திகள்

1. 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அருப்புக்கோட்டையில் 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
2. 66 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு
18 வயதிற்கு மேற்பட்டோரில் 66 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
3. ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- கலெக்டர் சந்திரகலா தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 352 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 21 ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று கலெக்டர் சந்திரகலா தெரிவித்து உள்ளார்.
4. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசு
மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் தலைவராக சுகந்திவடிவேல், துணைத்தலைவராக எம்.டி.ஜி.கதிர்வேல் இருந்து வருகின்றனர்.
5. மாவட்டத்தில் இதுவரை- 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி -கலெக்டர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.