கொரோனா விதிமுறைகளை மீறி நாட்டுக்கோழி சந்தை
சேதுபாவாசத்திரம் அருகே கொரோனா விதிமுறைகளை மீறி நாட்டுக்கோழி சந்தை நடைபெற்றது.
சேதுபாவாசத்திரம்:
சேதுபாவாசத்திரம் அருகே கொரோனா விதிமுறைகளை மீறி நாட்டுக்கோழி சந்தை நடைபெற்றது.
வாரச்சந்தைக்கு அனுமதியில்லை
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள பூக்கொல்லை கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டுக்கோழி சந்தை நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா 2-வது அலையின் தாக்கத்தால் தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருந்தது. பின்னர் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.
தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் இதுவரை வாரச்சந்தைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன்படி பேராவூரணியில் இதுவரை வாரச்சந்தை திறக்கப்படவில்லை.
கொரோனா பரவும் அபாயம்
இந்தநிலையில் சேதுபாவாசத்திரம் அருேக உள்ள பூக்கொல்லை கடைவீதியில் கொரோனா விதிமுறைகளை மீறி நேற்று நாட்டுச்கோழி சந்தை நடைபெற்றது. சந்தைக்கு வந்த ஏராளமானோர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கோழியை வாங்கி சென்றனர். நேமலும் சந்தையில் கோழி வாங்குவற்காக ஏராளமானோர் வந்து இருந்தனர்.
இதனால் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்படுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story