கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாகனம்- கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்


கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாகனம்- கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 Aug 2021 2:54 AM IST (Updated: 2 Aug 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

சேலம்:
கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
கையெழுத்து இயக்கம்
தமிழகம் முழுவதும் ஒரு வாரம் கொரோனா விழிப்புணர்வு குறித்த பிரசாரம் நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி நேற்று சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார். முன்னாக விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து வாகனம் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதே போன்று முன்எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. 
நோய் பரவலை தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
மருந்து, மாத்திரைகள்
தொற்று கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள 69 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 69 குழுக்கள் அமைக்கப்பட்டு சளித் தடவல் மாதிரி சேகரிப்பு, மருந்து மாத்திரைகள் வழங்குதல், உடல் வெப்பம் கண்டறிதல் போன்ற பணிகள் நடத்தப்படுகிறது. மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மலர்விழி வள்ளல், உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்கள் சுப்பிரமணி, செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story