கொரோனா பரவலை தடுக்க முக்கொம்பு சுற்றுலா மையத்தில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து
கொரோனா பரவலை தடுக்க முக்கொம்பு சுற்றுலா மையத்தில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜீயபுரம்,
கொரோனா பரவலை தடுக்க முக்கொம்பு சுற்றுலா மையத்தில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
முக்கொம்பு சுற்றுலா மையம்
திருச்சி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா மையமாக விளங்குவது முக்கொம்பு சுற்றுலா மையமாகும். இங்கு அனைவரும் கண்டு களித்து மனம் மகிழும்படி இயற்கையாக அமைந்துள்ள காவிரி ஆறு, கொள்ளிடம் ஆறு மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக சிறுவர்கள் விளையாடக்கூடிய சிறுவர் ெரயில் சிறுவர் முதல் பெரியவர் வரை மகிழ்விக்கும் விதமாக ராட்டினங்களும் அமைந்துள்ளன. இங்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும், ஆடிபெருக்கு, காணும் பொங்கல் உள்ளிட்ட நாட்களிலும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.
பொதுமக்களுக்கு தடை
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட இந்த சுற்றுலா மையம் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் ஊரடங்கு தளர்வு காரணமாக திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதாலும், அதை தடுக்க ஊரடங்கு வருகிற 9-ந்தேதி வரை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடவும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் அதிகாரிகள் முடிவெடுக்கலாம் என்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில் ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சியில் உள்ள முக்கிய கோவில்கள், காவிரி படித்துறைகளில் பொதுமக்கள் வருகைக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதன் எதிரொலியாக முக்கொம்பு சுற்றுலா மையத்தில் பொதுமக்களுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் ஏமாற்றம்
இதுபற்றி திருச்சி முக்கொம்பு நுழைவு வாயிலில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக பார்வையாளர்களுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று ஞாயிறுக்கிழமை என்பதால் ஏராளனமான சுற்றுலா பயணிகள் வரதொடங்கினர். ஆனால் இந்த தடை உத்தரவு காரணமாக முக்கொம்புவிற்கு வந்த ஏராளமானவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story