ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்கள், அம்மாமண்டபம் படித்துறை பகுதிகளில் பக்தர்களுக்கு இன்றும், நாளையும் தடை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்கள் அம்மாமண்டபம் படித்துறை பகுதிகளில் பக்தர்களுக்கு இன்றும், நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்கள்,
அம்மாமண்டபம் படித்துறை பகுதிகளில் பக்தர்களுக்கு இன்றும், நாளையும் தடை
ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்கள் அம்மாமண்டபம் படித்துறை பகுதிகளில் பக்தர்களுக்கு இன்றும், நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தடை
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியது.
இதையடுத்து ஆடிமாத திருவிழாக்களையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் ஆடி 18-ம் நாளான்று அம்மாமண்டபம் படித்துறை, காவிரி கரையோர பகுதிகளில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் இன்றும்(திங்கட்கிழமை), நாளையும்(செவ்வாய்க்கிழமை) பக்தர்களுக்கு தடைவிதித்து திருச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அறிவிப்பு பதாகை
இதையொட்டி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பூட்டப்பட்டு, பேரிகார்டு கொண்டு தடுப்பு ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் நுழைவு வாயில்களான தெற்கு, கிழக்கு, வடக்குவாசல் பகுதிகளில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு அதில் இன்றும், நாளையும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
சமயபுரம் கோவில் மாரியம்மன் கோவில் நடை இன்றும், நாளையும் சாத்தப்படும் என்றும், பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வரவேண்டாம் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.இதை தொடர்ந்து கோவிலில் ராஜகோபுரம் முன்பு, தேருக்கு அருகில் கோவிலின் பின்புறம் ஆகிய பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story