மராத்தான் பந்தயத்தில் 23 கி.மீ. தூரம் ஓடி 6 வயது சிறுவன் சாதனை
எண்ணூர் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன் என்பவருடைய மகன் காமேஸ்வரன் (வயது 6). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவயது முதல் ஓட்டப்பந்தய பயிற்சி பெற்று வந்தான்.
உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக நேற்று காலை 23.25 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணிநேரம் 36 நிமிடம் 30 வினாடிகளில் மாரத்தான் ஓடி முதல்முறையாக சாதனை செய்து, உலக சாதனையாளர் வரலாற்று புத்தகத்தில் (யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்) இடம் பெற்றுள்ளான்.
இதற்காக கே.வி.குப்பத்தில் இருந்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கினான். கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. கொடி அசைத்து ஓட்டத்தை தொடங்கி வைத்தார். கே.வி.குப்பத்தில் இருந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் எண்ணூர் தாழங்குப்பம் வரை சென்று, மீண்டும் கே.வி.குப்பத்தை வந்தடைந்தான். சாதனை படைத்த சிறுவன் காமேஸ்வரனுக்கு கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. விருது, சான்றிதழ் மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கினார்.
Related Tags :
Next Story