வேலூரில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
வேலூர்
வேலூர் ஆயுதப்படையில் அனிதா(32) என்பவர் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் நேதாஜி விளையாட்டு மைதானம் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அனிதாவின் கணவர் குபேந்திரன் என்பதும் வேலூர் அரிசி மண்டியில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளை கவனித்துக்கொள்ள பணி மாற்றி தரும்படி உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story