கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் புதிய ரேஷன் கார்டு வாங்க பொதுமக்கள் குவிந்தனர்
கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் புதிய ரேஷன் கார்டு வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
கோவை
கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் புதிய ரேஷன் கார்டு வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம்
கோவை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் புதிதாக ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் தேர்தல் நடைமுறை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
தேர்தல் நடைமுறைகள் முடிந்ததை தொடர்ந்து விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி சென்னையில் நடந்தது.
இந்த பணி நிறைவடைந்ததை தொடர்ந்து புதிதாக அச்சடிக்கப்பட்ட 10,980 ரேஷன் கார்டுகள் கோவை வந்தன. பின்னர் அந்த கார்டுகள் மாவட்டத்தில் உள்ள 12 தாலுக்காவிற்கும் பிரித்து அனுப்பப்பட்டன.
பொதுமக்கள் குவிந்தனர்
இந்த நிலையில் கோவை தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட விண்ணப்ப தாரர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வந்துவிட்டது, அதை தாலுகா அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளவும் என்று சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி சென்றது.
இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் புதிய ரேஷன் கார்டுகளை பெற தெற்கு தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர். ஒரே நேரத்தில் 500- க்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் வரிசை யில் நிறுத்தி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.
உரிய நடவடிக்கை
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ரேஷன் கார்டு வாங்க பொது மக்கள் ஒரே இடத்தில் குவிவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story