காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சார்பில் ஆங்கிலம் கற்பித்தலில் நவீன உத்திகளும் உபகரணங்களும் என்ற தலைப்பிலான இணையவழி பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கில் ஆங்கிலத்துறை தலைவர் மதன் வரவேற்றார்.இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேராசிரியர் கருணாகரன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது,, ஆங்கில மொழி இன்று வேலை வாய்ப்புகளைத் தரும் மொழியாக உருவாகியுள்ளது.ஆங்கில மொழி வெறும் தகவல் தொடர்புக்கான மொழியாக மட்டும் இல்லாமல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக தோன்றும் கருத்துகளையும் கண்டுபிடிப்புகளையும் விளக்கக் கூடிய மொழியாக உருவெடுத்திருக்கிறது.
மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடக் கூடிய ஆற்றலையும் தங்கள் துறை சார்ந்த அறிவை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும்.இதையே வேலை வழங்கும் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என்றார்.