விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்
எட்டயபுரத்தில் விவசாய தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது.
எட்டயபுரம்:
வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் ஓராண்டை கடந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து எட்டயபுரத்தில் சி.ஐ.டி.யு., தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தெருமுனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் நடராஜன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், ஆட்டோ சங்க தலைவர் கண்ணன், பொருளாளர் கண்ணன், பாரதி மில் சி.ஐ.டி.யு. தலைவர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story