கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறு குறு விவசாயி சான்று கேட்டு 4748 பேர் விண்ணப்பம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறு குறு விவசாயி சான்று கேட்டு 4748 பேர் விண்ணப்பம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாரத பிரதமர் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானிய முறையில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு சிறு, குறு விவசாயிகள் சான்று நடப்பு ஆண்டிற்கு வழங்கிட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வேணாண்மை அலுவலர் மற்றும் கரும்பு அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் சின்னசேலம் குறுவட்டத்தில்-1,283 பேர், கள்ளக்குறிச்சி குறுவட்டத்தில்-832 பேர், சங்கராபுரம் குறுவட்டத்தில்-368 பேர், ரிஷிவந்தியம் குறுவட்டத்தில்-738 பேர், திருக்கோவிலூர் குறுவட்டத்தில்-630 பேர், உளுந்தூர்பேட்டை குறுவட்டத்தில்-582 பேர், திருநாவலூர் குறுவட்டத்தில்-315 பேர் என மொத்தம் 4,748 பேர் சிறு, குறு விவசாயிகள் சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளனர். பெறப்பட்ட விண்ணப்பங்கள் இணைய வழியாக பதிவேற்றம் செய்யப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு இணைய வாயிலாகவே சிறு, குறு விவசாய சான்றுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story