கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி.
புதுக்கோட்டை,
புதிதாக 23 பேருக்கு தொற்று
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறையினரால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து180 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 39 பேர் நேற்று `டிஸ்சார்ஜ்' ஆகினர். மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து494 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 பேர் பலி
இந்த நிலையில் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 367 ஆக உள்ளது. கொரோனா 3-வது அலை உருவாக கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story