கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஊத்துக்குளி அருகே கோவில் இட ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஊர்மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திருப்பூர்
ஊத்துக்குளி அருகே கோவில் இட ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஊர்மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஆக்கிரமிப்பு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஐ.டி.ஐ. படித்து மின்வாரியத்தில் பயிற்சி முடித்து வேலைவாய்ப்பு கிடைக்காத தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில்,மின்வாரியத்தில் ஐ.டி.ஐ. தொழில் பழகுனர் பயிற்சி முடித்துள்ளோம். . ஏற்கனவே நாங்கள் தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றுள்ளோம். மீண்டும் எங்களுக்கு தேர்வு எழுதாமல் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஊத்துக்குளி மொரட்டுப்பாளையம் செம்பாவள்ளம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில்எங்கள் பகுதில் பட்டத்தரசியம்மன் கோவில் பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி வருகிறார்கள். அந்த ஆக்கிரமிப்பை அகற்றி உதவ வேண்டும் என்றுகூறியுள்ளனர்.
தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில் ஆதார் மையங்களில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் நல்லாத்துப்பாளையத்தை சேர்ந்த சம்பத்குமார் அளித்த மனுவில், தனது வீட்டுக்கு மின் இணைப்பு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறியுள்ளார்.
தஞ்சாவூரை சேர்ந்த சாந்தி என்பவர் அளித்த மனுவில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து ஓய்வு பெற்றுவிட்டேன். ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை நிர்வாகிகள் கொடுத்த மனுவில் திருப்பூர் மாநகரில் சாலைகள் தோண்டி பல நாட்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக தோண்டி சீரமைக்கப்படாமல் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
முதலிபாளையம் டி.கே.எஸ்.நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்தமனுவில் நாங்கள் இந்த பகுதியில் 6 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். டி.கே.எஸ்.நகரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் வீட்டிற்கான முழு பணத்தையும் கொடுத்துவிட்டோம். ஆனால் எங்களுக்கு இதுவரை வீடு பத்திரப்பதிவு செய்துதரப்படவில்லை. எனவே வீட்டை பத்திரப்பதிவு செய்து மின்வசதி, தண்ணீர் வசதி போன்றவை செய்துதர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story