குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2021 11:01 PM IST (Updated: 2 Aug 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர்.

கயத்தாறு:
கயத்தாறு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர்.

குடிநீர் பிரச்சினை

கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி கிராமத்தில் கோவில்பட்டி கூட்டு குடிநீர் நிறுத்தப்பட்ட நிலையில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் வழங்கப்படவில்லை என்றும், இதனால் இந்த கிராம மக்கள் கடந்த 10 மாதங்களாக பல்வேறு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 
இந்தநிலையில் நேற்று சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும், என அறிவித்து இருந்தனர். இதையொட்டி ராஜாபுதுக்குடியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு பஞ்சாயத்து அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் செந்தூர்பாண்டி, உதவி பொறியாளர் மெர்சி, கயத்தாறு தாசில்தார் பேச்சிமுத்து, கயத்தாறு வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி ஆணையாளர் பானுமதி, வருவாய் ஆய்வாளர் நேசமணி, ராஜாபுதுக்குடி பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகச்சாமி, துணைத்தலைவர் கருப்பசாமி, சன்னதுபுதுக்குடி பஞ்சாயத்து தலைவர் நம்பிதாஸ் மற்றும் ராஜாபுதுக்குடி கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், ஊராட்சி செயலர் முத்துக்குமார,் வார்டு உறுப்பினர்கள், ஊர் நாட்டாமை ஆகியோர் கலந்து கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது ராஜா புதுக்குடி கிராமத்திற்கு 25 ஆயிரம் லிட்டர் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் உடனடியாக தண்ணீர் வழங்க ஆவன செய்யப்படும், ராஜாபுதுக்குடி, சன்னது புதுக்குடி பகுதிகளில் அடிக்கடி மின் மோட்டார்கள் பழுதடைகின்றன. ஆகவே புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைத்து மின்சார பற்றாக்குறை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, கூறினர். இந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து ெசன்றனர்.

Next Story