பாலீஷ் செய்து தருவதாக கூறி மூதாட்டியிடம் 5 பவுன் தாலி சங்கிலி அபேஸ் மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பாலீஷ் செய்து தருவதாக கூறி  மூதாட்டியிடம் 5 பவுன் தாலி சங்கிலி அபேஸ் மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Aug 2021 11:04 PM IST (Updated: 2 Aug 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

பாலீஷ் செய்து தருவதாக கூறி மூதாட்டியிடம் 5 பவுன் தாலி சங்கிலி அபேஸ் மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூந்தலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்கொடி(வயது 64). இவர் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் டிப்டாப் உடை அணிந்த 2 மர்ம நபா்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினார். இதை உண்மை என்று நம்பிய ஜெயக்கொடி அவர்களை உள்ளே அழைத்தார். அப்போது அவர்களில் ஒருவர் மட்டும் வீட்டுக்குள் சென்றார். இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் வெளியே நின்று கொண்டிருந்தார். 

பின்னர் வீட்டுக்குள் வந்த மர்மநபரிடம் ஜெயக்கொடி தனது கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை கழற்றி கொடுத்தார். அதை வாங்கி செம்புக்குள் போட்ட மர்ம நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயக்கொடி திருடன் திருடன் என கத்தினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்தனர். ஆனால் அதற்குள் சுதாரித்துக்கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று வி்ட்டனர். பறிபோன தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதில் மர்ம நபர்களில் ஒருவர் தப்பி ஓடிய காட்சி பதிவாகி உள்ளது. இதை ஆதாரமாக கொண்டு ஜெயக்கொடி உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து ஜெயக்கொடியிடம் 5 பவுன் தாலி சங்கிலியை அபேஸ் செய்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story