தடுப்புச்சுவர் இல்லாத பாலத்தால் விபத்து அபாயம்


தடுப்புச்சுவர் இல்லாத  பாலத்தால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 2 Aug 2021 11:12 PM IST (Updated: 2 Aug 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளத்தையடுத்த மைவாடி பகுதியிலுள்ள மழைநீர் ஓடையின் மேலுள்ள பாலத்தில் பக்கவாட்டு தடுப்புச் சுவர் இல்லாததால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

போடிப்பட்டி
மடத்துக்குளத்தையடுத்த மைவாடி பகுதியிலுள்ள மழைநீர் ஓடையின் மேலுள்ள பாலத்தில் பக்கவாட்டு தடுப்புச் சுவர் இல்லாததால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
விவசாய நிலங்கள்
கோவை-திண்டுக்கல் சாலையிலிருந்து மைவாடி வழியாக கணியூர், மடத்துக்குளம், வேடப்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது. இந்த பகுதியில் அரசு வெண்பட்டு விற்பனை அங்காடி, துணை மின் நிலையம் உள்ளிட்டவை உள்ளது.அத்துடன் ஏராளமான விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்கான வழித்தடமாகவும் இது உள்ளது. 
இதனால் தினசரி ஏராளமான வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. இந்த சாலையில் கவுண்டப்ப கவுண்டன் புதூருக்கு அருகில் மழைநீர் ஓடை ஒன்று உள்ளது. அந்த ஓடையின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தில் பக்கவாட்டு தடுப்புச் சுவரோ அல்லது தடுப்புகளோ எதுவும் இல்லாமல் உள்ளது. அத்துடன் பக்கவாட்டிலுள்ள சாலைப்பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் இந்த சாலையைக் கடக்கும் வாகனங்கள் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையிலேயே பயணிக்க வேண்டியதுள்ளது.
மழைக்காலங்கள்
அத்துடன் குறுகலான இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் வரும்போது எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்கி வழிவிட முயற்சித்தால் ஓடைப்பள்ளத்தில் விழுந்து விபத்துக்குளாகும் அபாயம் உள்ளது. அதிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் இந்த பாலத்தைக் கடக்கும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. 
மழைக்காலங்களில் ஓடையில் நீர் வரத்து அதிகரிக்கும் போது இந்த பாலத்தின் மீது தண்ணீர் செல்லும்.அதுபோன்ற சமயங்களில் பக்கவாட்டு சுவர் இல்லாததால் வாகனங்கள் ஓடை நீரில் அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பாலத்துக்கு பக்கவாட்டு சுவர் அல்லது தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story