10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்


10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 2 Aug 2021 11:19 PM IST (Updated: 2 Aug 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

மானாமதுரை,

திருப்புவனம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் திருப்பாச்சேத்தி, ஆவரங்காட்டை சேர்ந்த கல்லூரி மாணவரான அருண்பாண்டியனுக்கும்(19) பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற அருண்பாண்டியன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த சிறுமியின் தாயார் மானாமதுரை மகளிர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் அருண்பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.

Next Story