கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை


கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 2 Aug 2021 11:21 PM IST (Updated: 2 Aug 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை

பெருமாநல்லூர்
பெருமாநல்லூர் அருகேயுள்ள, பொங்குபாளையம் ஏடி காலனியில் உங்கள் தொகுதியில் முதல்அமைச்சர் திட்டத்தின் கீழ் 16 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா கடந்த வாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இலவச வீட்டுமனை பட்டா ஒரு தரப்பினருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது எனவும், தங்களுக்கும் வழங்க கோரி 50க்கும் மேற்பட்டோர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனையடுத்து நில வருவாய் ஆய்வாளர் சக்திவேல், கிராம நிர்வாக அலுவலர் முகமது மர்ஜித் மற்றும் பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் ஆகியோர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Next Story