தடுப்பூசி போட்டு கொள்வதில் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் தான் முன் உதாரணமாக இருக்க வேண்டும்


தடுப்பூசி போட்டு கொள்வதில் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் தான் முன் உதாரணமாக இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 Aug 2021 11:21 PM IST (Updated: 2 Aug 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் தான் தடுப்பூசி கொள்வதில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் பேசினார்.

திருவண்ணாமலை

பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் தான் தடுப்பூசி கொள்வதில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் பேசினார்.

விழிப்புணர்வு உறுதிமொழி

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கு பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுடன் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் கைகழுவும் முறைப்பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை       தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி முன்னிலை வகித்தார். 

பின்னர் அரசு அலுவலர்களுக்கு கைகழுவும் முறை குறித்து டாக்டர்கள் விளக்கம் அளித்தனர். முன்னதாக கலெக்டர் முருகேஷ் பேசுகையில், ‘‘கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக கடைபிடிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அரசு அலுவலர்கள் தான் பக்க பலமாக இருக்க வேண்டும். எனவே அனைத்து அரசு அலுவலர்களும் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்தும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

உறுதிமொழி

முன்னதாக தென்மாத்தூர் கிராமத்தில் ஜீவா வேலு பன்னாட்டு பள்ளியிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டம் கூடுதல் கலெக்டர் பிரதாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) அஜிதாபேகம், உதவி கலெக்டர் வெற்றிவேல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story