பட்டிவீரன்பட்டி அருகே பரபரப்பு கோவில் இரும்பு கேட்டில் சுற்றி இருந்த பாம்பு


பட்டிவீரன்பட்டி அருகே பரபரப்பு கோவில் இரும்பு கேட்டில் சுற்றி இருந்த பாம்பு
x
தினத்தந்தி 3 Aug 2021 12:32 AM IST (Updated: 3 Aug 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே கோவில் இரும்பு கேட்டில் பாம்பு சுற்றி இருந்ததார் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அடுத்த சித்தரேவு கிராமம் கோட்டைப்பட்டி தெருவில் பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை திறக்க நேற்று காலை கோவில் பூசாரி கண்ணன் வந்தார். அப்போது, கோவிலின் இரும்புகேட்டை சுற்றி ஒரு பச்சைப்பாம்பு இருந்தது. இதனால் கோவிலை திறக்க முடியவில்லை. காலை முதல் இரவு வரை அந்த பாம்பு இரும்பு கேட்டிலேயே இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர். 

Next Story