கொரோனாவுக்கு ஒருவர் பலி
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 622 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 40 வயது ஆண், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பழனியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 623 ஆனது.
இதற்கிடையே நேற்று 3 பெண்கள் உள்பட மேலும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 32 ஆயிரத்து 222 ஆக உயர்ந்தது. அதேநேரம் 22 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். நேற்றைய நிலவரப்படி 192 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story