ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 3 Aug 2021 1:07 AM IST (Updated: 3 Aug 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திண்டுக்கல்:
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடி கிருத்திகை நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சண்முகர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி காலையில் பால், இளநீர், சந்தனம் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோவில், என்.ஜி.ஓ. காலனி முருகன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பட்டிவீரன்பட்டி அண்ணா நகரில் உள்ள வள்ளி-தெய்வானை சமேத முருகன் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு 16 வகையான அபிஷேககள் நடைபெற்றன. பின்னர் வள்ளி-தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் அய்யம்பாளையம் குமரன் குன்று மலை மேல் அமைந்துள்ள அருள்முருகன் கோவிலிலும் ஆடிகிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்றது.நத்தம் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை பூஜை நடந்தது. இதில் சுப்பிரமணியசாமிக்கு பாலாபிஷேகம், விபூதி, சந்தனம், தீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. அதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் உள் பிரகாரத்தில் உள்ள தண்டபாணி சன்னதியிலும் ஆடி கிருத்திகை பூஜை நடந்தது.

Next Story