பூட்டிய வீட்டுக்குள் முதியவர் பிணம்


பூட்டிய வீட்டுக்குள் முதியவர் பிணம்
x
தினத்தந்தி 3 Aug 2021 1:11 AM IST (Updated: 3 Aug 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் பூட்டிய வீட்டுக்குள் முதியவர் பிணமாக கிடந்தார்.

நெல்லை:
பாளையங்கோட்டை எழில் நகரை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 62). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. 

உடனே போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மகாதேவன் தலைகுப்புற அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி குலவணிகர்புரம் கிராம நிர்வாக அலுவலர் அனந்த ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story