பாய்லர் ஆலை ஊழியர் வீட்டில் 9 பவுன் நகைகள் திருட்டு
திருவெறும்பூர் பாய்லர் ஆலை ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் 9 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்
திருவெறும்பூர்
திருவெறும்பூர் அருகே பாய்லர் ஆலை உள்ளது. ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பு பகுதி அருகிலேயே உள்ளது. இந்த குடியிருப்பு ஏ செக்டார் மாடி வீட்டில் வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 39). இவர் பாய்லர் ஆலையில் ஆர்ட் டிசைனராக பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த புதன்கிழமையன்று வீட்டை பூட்டி விட்டு மனைவி மகளுடன் காட்டூர் அருகே கைலாஷ் நகரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று வீடு திரும்பினார். அப்போது கதவில் பூட்டு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் களைந்து கிடந்தன. மேலும் உள்பகுதி லாக்கர் திறக்கப்பட்டு அதில் இருந்த தங்க சங்கிலி உள்பட 9 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பெல் நிறுவன போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story