ஓடும் பஸ்சில் பயணிகளிடம் திருடியவர் கைது
ஓடும் பஸ்சில் பயணிகளிடம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,ஆக
மதுரை டவுன் பஸ்களில் பயணம் செய்பவர்களின் பைகளை திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ராஜசேகரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் பஸ்களில் திருடும் பழைய குற்றவாளியான பாலசுப்பிரமணி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மதுரை டவுன் பஸ்சில் பயணிகளிடம் பைகளை திருடியதை ஒப்புக் கொண்டார். போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 16 பவுன் நகைகள், 4 மடிக்கணினிகள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை விரைந்து செயல்பட்டு பிடித்த தனிப்படை போலீசாரை கமிஷனர் பாராட்டினார்.
Related Tags :
Next Story