பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது
திருச்சியில் 2-ம் நிலை காவலர் பணி பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது
திருச்சி
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-ம் ஆண்டுக்கான 2-ம் நிலை காவலர் சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு பணி காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த ஆண் பெண் என 3,210 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஆண்களுக்கான தகுதி தேர்வு திருச்சியில் நடந்து முடிந்து விட்டது. பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற 1,006 பேரில் முதல் கட்டமாக 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களில் 104 பேர் வரவில்லை. பின்னர் கலந்து கொண்ட 296 பேருக்கு உடல் தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடைபெற்றன. அவர்களில் ஒரு திருநங்கையும் சேர்ந்து 296 பேர் கலந்து கொண்டனர். முடிவில் 201 பேர் தேர்வாகினர். இதில் திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த திருநங்கை ரிஹானா (19) கலந்து கொண்டார். பிளஸ்-2 படித்துள்ள ரிஹானாவின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். அதில் அவர் உரிய நேரத்தில் ஓடி முடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதனை தொடர்ந்து நீளம் தாண்டுதல் குண்டு எறிதல் தேர்விலும் அவர் கலந்து கொள்ளவிருக்கிறார். இதில் தேர்ச்சி பெற்றால் திருநங்கை என்ற தனி பிரிவில் காவல்துறையில் பணிபுரிய அவர் தேர்தெடுக்கப்படுவார்.

Related Tags :
Next Story