பெண்ணிடம் 8 பவுன் நகை பறித்தவர் கைது
பெண்ணிடம் 8 பவுன் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்
திருச்சி
திருச்சி சின்னக்கடை வீதி பத்தாய் கடைத் தெருவை சேர்ந்தவர் சோனமுத்து. இவர் தங்க நகைகள் செய்யும் ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அகிலா (வயது 47). சம்பவத்தன்று அகிலா தனது அறையின் கதவுகளை திறந்து வைத்து கொண்டு தூங்கியுள்ளார். சோனமுத்துவின் வீட்டின் அருகில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்தின் வழியாக நேற்று அதிகாலை மர்ம நபர்கள் சோனமுத்து வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த அகிலாவின் வாயில் துணியை வைத்து திணித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து கோட்டை போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அசோக்குமார்(32) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story