கொரோனா தடுப்பு விதிமுறை மீறல் ஒரேநாளில் ரூ.5 லட்சம் அபராதம் வசூல்
ரூ.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது
திருச்சி
கொரோனா 3-வது அலை பரவக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் 27 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மற்றும் அரசு உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தநிலையில் மாநகர துணை கமிஷனர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) சிற்றரசு தலைமையில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு சார்பாக அண்ணாசிலை ரவுண்டானாவில் சிறப்பு வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் 911 பேர் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 81 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒரே நாளில் ரூ.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேற்கண்ட தகவலை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்தார்.

Related Tags :
Next Story