செல்போன், பணம் திருடிய வாலிபர் கைது
கடையத்தில் செல்போன், பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடையம்:
தென்காசி புதுமனை தெருவைச் சேர்ந்தவர் காஜா மைதீன் மகன் சாதிக் அலி. இவர் நேற்று மாலையில் கடையம் ராமநதி அணையில் குளித்தபோது, தனது ஆடைகளை கழற்றி அணையின் கரைப்பகுதியில் வைத்து இருந்தார். அதற்குள் தனது செல்போன் மற்றும் ரூ.1,500-ஐ வைத்திருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் நைசாக அந்த செல்போன், பணத்தை திருடினார். மேலும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரின் கண்ணாடிகளை உடைத்து, அதில் இருந்த 3 சாப்பாடு பொட்டலங்களை திருடினார்.
அப்போது அந்த நபரை அக்கம்பக்கத்தினர் கையும் களவுமாக பிடித்து கடையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் ஆவுடையானூர் சிதம்பர தெருவைச் சேர்ந்த அரிராமசாமி மகன் முருகன் (வயது 23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த பணம், செல்போனை மீட்டனர்.
Related Tags :
Next Story