திசையன்விளை மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ.3-க்கு விற்பனை


திசையன்விளை மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ.3-க்கு விற்பனை
x
தினத்தந்தி 3 Aug 2021 3:21 AM IST (Updated: 3 Aug 2021 3:21 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சொட்டுநீர் பாசனம் மூலம் அதிக அளவில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் முருங்கைக்காய்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் முருங்கைக்காய் உற்பத்தி அதிகமாக உள்ளது. ஆடி மாதம் என்பதால் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. கேரள மாநிலத்தில் முருங்கைக்காய் கிலோ ரூ.3-க்கு விற்பனைகொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ளதால் அங்கு மார்க்கெட் இயங்கவில்லை. இதனால் அங்கு முருங்கைக்காய்களை அனுப்ப முடியவில்லை.

இதனால் திசையன்விளை மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. அதாவது நேற்று முன்தினம் கிலோ ரூ.4 மற்றும் ரூ.5 வரை விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காயின் மொத்த விலை நேற்று ரூ.3-க்கு வீழ்ச்சி அடைந்தது.

இதுகுறித்து முருங்கை விவசாயிகள் கூறுகையில், “முருங்கைக்காய்களை பறித்து மார்க்கெட்டிற்கு கொண்டு வர கிலோவிற்கு 3 ரூபாய் செலவு ஆகிறது. இதுபோக உரம், பூச்சி மருந்து, இறைப்பு கூலி என பல்வேறு செலவுகள் உள்ளன. ஆனால், மார்க்கெட்டில் ஒரு கிலோ 3 ரூபாய்க்கு முருகைக்காய் விற்பனை ஆவதால் எங்களுக்கு பறிப்பு கூலிகூட கிடைக்கவில்லை. இதனால் சில விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த முருங்கைக்காய்களை கால்நடைகளுக்கு தீவனமாக அளித்து வருகின்றனர்” என வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story