சூதாடிய 12 பேர் கைது


சூதாடிய 12 பேர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2021 3:36 AM IST (Updated: 3 Aug 2021 3:36 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் சூதாடிய 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி மாரனேரி போலீசார் கட்டளைப்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு காசு வைத்து சூதாடிய வெங்கிடசுப்பிரமணியம் (வயது 38), வீரமணி (42), பொன்னுசாமி (54) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் அதே பகுதியில் உள்ள ஒரு முட்காட்டில் காசு வைத்து சூதாடியதாக சீனிவாசன் (47), காத்தவராயன் (37), பாலமுருகன் (48), ராமராஜ் (41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதே போல் சிவகாசி கிழக்கு போலீசார் நாரணாபுரம் ரோடு முத்துராமலிங்கம்நகரில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு காசு வைத்து சூதாடிய முருகன் (48), லட்சுமணன் (54), சுப்பிரமணி (39), மாரிச்சாமி (32), சண்முகராஜ் (42) ஆகியோரை கைது செய்தனர்.

Next Story