கணவரை அடித்துக் கொன்ற ஆசிரியை கைது: உறவினர்கள் சாலைமறியல்
வாழப்பாடி அருகே கணவரை அடித்துக் கொன்ற ஆசிரியை கைது செய்யப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது35). இவருடைய மனைவி. இளமதி. இவர், அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே மணிகண்டன் எந்த வேலைக்கும் செல்லாமல் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இளமதி கணவரை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளமதியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இளமதி போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், தினமும் கணவர் குடித்துவிட்டு தகராறு செய்ததால் வேதனையுடன் வாழ்ந்து வந்தேன். எனவே பிள்ளைகளுடன் நிம்மதியாக வாழ கணவரை கொலை செய்தேன் என்று கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்னர்.
இதற்கிடையே நேற்று காலை மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அத்தனூர்பட்டியில் வாழப்பாடி - பேளூர் சாலையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகே அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story