ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
சேலம்:
சேலத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை அன்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று ஆடிக்கிருத்திகையையொட்டி சேலம் குமரகிரி முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. அதேபோன்று பெரமனூர் ஆறுமுக கந்தசாமி கோவிலிலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் சேலம் அழகாபுரம் சுப்பிரமணியசாமிக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதே போன்று ஊத்துமலை முருகன் கோவில், காளிப்பட்டி கந்தசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடத்தப்பட்டன. சாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லாததால் கிருத்திகை தினமான நேற்று அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் இன்றி வழிபாடுகள் மட்டும் நடத்தப்பட்டன.
Related Tags :
Next Story